சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்ல ரூ.3 கோடியில் மலைப்பாதை அமைக்கும் பணி அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு


சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்ல ரூ.3 கோடியில்  மலைப்பாதை அமைக்கும் பணி  அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
x
தினத்தந்தி 19 Oct 2021 10:05 PM IST (Updated: 19 Oct 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்லும் வகையில் ரூ.3 கோடியில் மலைப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆய்வு செய்தார்.

செஞ்சி, 

செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் மலை மீது உள்ளது பிரசித்தி பெற்ற ரங்கநாத பெருமாள் கோவில். பல்லவர் கால குடைவரை கோவிலாக விளங்கி வருகிறது.  மலை மீதுள்ள இந்த கோவிலுக்கு செல்ல 120 படிக்கட்டுகள் உள்ளன.

 இதன் வழியாக தான் ஏறி செல்ல வேண்டும். வயதானவர்கள் இதன் வழியாக ஏறி செல்ல முடியாமல் சிரமப் பட்டனர். எனவே கோவிலுக்கு எளிதில் சென்று வரும் வகையில் மலைப்பாதை அமைத்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

முழுவீச்சில் நடக்கும் பணிகள்

இதை அரசின் கவனத்திற்கு  சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் எடுத்து சென்றார். இதையடுத்து, தமிழக அரசு கோவிலுக்கு மலைப்பாதை மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து, தற்போது மலைப்பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படடு முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அங்கிருந்த அதிகரிகளிடம் தெரிவித்தார். 

ஆய்வின் போது, மாவட்ட தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளர் அஞ்சாஞ்சேரி கணேசன், ஒன்றிய பொருளாளர் குணசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.
இப்பணிகள் நிறைவுபெற்றவுடன், பக்தா்கள் கார், வேன் போன்ற வாகனங்களில் இந்த சாலையை பயன்படுத்தி கோவிலுக்கு அருகிலேயே செல்ல முடியும்.

 இதன் மூலம் சிறியவர்கள் தொடங்கி முதியவர்கள் வரையில் அனைவரும் எளிதில் சாமி தரிசனம் செய்து வர முடியும் என்பது குறிப்பிடதக்கதாகும்.

Next Story