வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
விவசாயி தற்கொலை
கல்லாவி அருகே உள்ள குருகபட்டியை சேர்ந்தவர் சென்ன கிருஷ்ணன் (வயது 45). விவசாயி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் படவனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து கல்லாவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.
தேன்கனிக்கோட்டை யாரப் தர்கா பகுதியை சேர்ந்தவர் ஜெகநாத் (47). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடன் பிரச்சினை
கெலமங்கலத்தை அடுத்த ஜோதிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (45). தொழிலாளி. இவருக்கு கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்தார். கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போச்சம்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன் (55). ஸ்வீட் கடை நடத்தி வந்தார். இவர் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தார். கடனை திருப்பி செலுத்தமுடியாத விரக்தியில் விஷம் குடித்தார். இதற்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் பலியானார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story