மாவட்ட செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Transport workers protest

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர்

வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு போக்குவரத்து பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சம்மேளன வேலூர் தலைவர் கோமகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சிறப்பு அழைப்பாளராக சம்மேளன மாநில இணைசெயலாளர் நாகராஜன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை மாநில அரசு உடனடியாக தொடங்க வேண்டும், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.