பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை


பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை
x
தினத்தந்தி 21 Oct 2021 11:11 PM IST (Updated: 21 Oct 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

தீயணைப்புத்துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நடந்தது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஒத்திகை விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது.இதற்கு கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின்காஸ்ட்ரோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீட்பு உபகரணங்களுடன் தீயணைப்பு துறையினர் ஒத்திகை செய்து காண்பித்தனர். குறிப்பாக சாலையில் மரங்களால் ஏற்படும் விபத்து மீட்பு பணிகள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள், தீ விபத்து தடுப்பு பணிகள் குறித்து ஒத்திகை நடந்தது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சுந்தரேஸ்வரன், வேல்முருகன், முகுந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story