29-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

29-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும.் இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். விவசாயிகள் தங்களது தேவைகள் மற்றும் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறுவார்கள். இந்த கூட்டம் கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேலாக நடைபெறவில்லை. தற்போது அரசு இந்த கூட்டத்தை கலெக்டர் அலுவலகத்தில் நடத்த அனுமதித்துள்ளது. அதன்படி வருகிற 29-ந் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டம் வருகிற 29-ந் தேதி காலை 10.30 மணி அளவில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story