4 ஊராட்சி துணை தலைவர்கள் தேர்வு


4 ஊராட்சி துணை தலைவர்கள் தேர்வு
x
தினத்தந்தி 22 Oct 2021 10:39 PM IST (Updated: 22 Oct 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

4 ஊராட்சி துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருப்புவனம், 
திருப்புவனம் யூனியனில் 45 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 41 ஊராட்சி மன்றங்களுக்கு துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கணக்கன்குடி, பழையனூர், பாப்பாகுடி, தூதை ஆகிய 4 ஊராட்சி மன்றங்கள் மற்றும் துைணத் தலைவர் பதவிக்கு தேர்வு நடைபெறாமல் இருந்தது. தேர்தல் ஆணைய உத்தரவிற்கிணங்க நேற்று 4 ஊராட்சி மன்றங் களிலும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் கணக்கன்குடி ஊராட்சி துணைத்தலைவராக காளிமுத்து, பழையனூர் ஊராட்சி துணைத் தலைவராக வீரணன், பாப்பாகுடி ஊராட்சி துணைத் தலைவராக பழனிவேல் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யபட்டனர். தூதை ஊராட்சி துணைத்தலைவருக்கு செல்லசங்குராசா, தன சேகரன் ஆகிய 2 பேர் போட்டியிட்டனர். இதில் தனசேகரன் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரியும் யூனியன் ஆணையாளருமான சுமதி தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் தலைமையில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

Next Story