திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சத்யா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், உயர வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து திட்டங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
உயர வளர்ச்சி தடைபட்டோர் வசிக்க ஏற்ற வகையில் அரசு வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும்.
சிறப்பு கவனம் செலுத்தி இவர்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுத்தர வேண்டும்.
மாதாந்திர உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மாவட்ட தலை நகரங்களில் உணவு வசதியுடன் கூடிய சிறப்பு தங்கும் விடுதிகள் கட்டித்தர வேண்டும்.
அரசு பஸ்களில் மாநிலம் முழுவதும் இலவச பஸ் பயண வசதி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story