மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா


மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா
x
தினத்தந்தி 25 Oct 2021 11:18 PM IST (Updated: 25 Oct 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா

தர்மபுரி, அக்.26-
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்ககளை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 408 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இலவச வீட்டு மனை பட்டா
இந்த மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் திவ்யதர்சினி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ேமலும் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி சிறுமியிடம் கோரிக்கைகளை கவனமாக கேட்டு அறிந்தார்.
கூட்டத்தில் ஊட்டமலையை சேர்ந்த 6 மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6 பேருக்கு இலவச சலவைப் பெட்டி மற்றும் முடி திருத்தும் உபகரணங்கள், கணவனை இழந்து வாழும் பெண்ணுக்கு தொழில் தொடங்க ரூ.20 ஆயிரம் கடன் உதவிக்கான காசோலை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்
கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அய்யப்பன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜான்சிராணி உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story