ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கிய குழந்தை உள்பட 4 பேர் மீட்பு

ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய குழந்தை உள்பட 4 பேர் மீட்கப்பட்டனர்.
சேலம்:
ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய குழந்தை உள்பட 4 பேர் மீட்கப்பட்டனர்.
வெள்ளம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். விடுமுறை நாட்களில் ஆத்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
இந்த நிலையில் ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
4 பேர் மீட்பு
இதில் நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த ஒரு குழந்தை, பெண் உள்பட 4 பேர் சிக்கி கொண்டனர். அவர்கள் அங்கிருந்து தப்பிக்க நீர்வீழ்ச்சியின் இடது புறமாக உள்ள பாறை மீது ஏறினர். அவர்களை அங்கிருந்தவர்கள் கயிறு கட்டி மீட்டனர். இதனிடையே அவர்களில் 2 வாலிபர்கள் ஆற்றில் தவறி விழுந்தனர். பின்னர் அந்த 2 வாலிபர்களும் நீச்சலடித்து கரை ஏறினர். அவர்களையும் அங்கிருந்தவர்கள் மீட்டனர்.
இதை நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story