தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 Oct 2021 10:54 PM IST (Updated: 26 Oct 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
ஆத்தூர் தாலுகா வீரக்கல் அருகே உள்ள வீ.கூத்தம்பட்டி பகுதியில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் தினமும் சிரமப்படுகின்றனர். மேலும் வீரக்கல் பிரிவுக்கு சென்று பஸ் ஏறும் நிலை உள்ளது. எனவே கூடுதலாக பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராணி, வீ.கூத்தம்பட்டி.
தெருவில் தேங்கிய மழைநீர் 
தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சியில் 8-வது வார்டில் கோம்பை காலனி கிழக்கு தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் மழைநீர் கருப்பு நிறமாக மாறி, மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உருவாகி, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-சிவா, கோம்பை.
குப்பை சேகரிப்பு பணி 
நிலக்கோட்டை 8-வது வார்டு பகுதியில் தினமும் வீடுகளில் குப்பைகளை சேகரிப்பதில்லை. இதனால் குப்பைகளை திறந்தவெளியில் கொட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுவதை தடுக்க தினமும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
-அழகர், நிலக்கோட்டை.
சேதமடைந்த மின்கம்பம்
திண்டுக்கல் அருகே உள்ள பழைய முத்தனம்பட்டியில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துவிட்டது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வௌியே தெரிந்தபடி எலும்பு கூடு போன்று காட்சி அளிக்கிறது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. அதற்குள் மின்கம்பத்தை மாற்றுவார்களா? 
-காளிமுத்து, பழைய முத்தனம்பட்டி.
மின்தடையால் அவதி 
தேனி மாவட்டம் ஓடைப்பட்டியை அடுத்த காமாட்சிபுரத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பெண்கள் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளை, தேவையான நேரத்தில் செய்ய முடியவில்லை. மாணவ-மாணவிகளும் படிக்க முடியவில்லை. எனவே மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். 
-மேகா, காமாட்சிபுரம்.
குப்பை குவியல் அகற்றப்படுமா? 
தேனி பங்களாமேடு பகுதியில் மாணவர்கள் விடுதி அமைந்துள்ள பகுதியில் திறந்த வெளியில் குப்பைகள் மலைபோல் கொட்டி குவிக்கப்படுகிறது. இதனால் சாரல் மழை பெய்தால் கூட மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும்.
-கணேசன், தேனி.
மணல் அள்ளும் கும்பல்
குஜிலியம்பாறை தாலுகா ஆர்.புதுக்கோட்டை அருகே களத்துபட்டியில் ஆற்றில் அனுமதி இல்லாமல் சிலர் மணல் அள்ளி செல்கின்றனர். இதனால் கனிமவளம் கொள்ளை போவதோடு, ஆறு பாழாகி வருகிறது. மேலும் மழைக்காலத்தில் தண்ணீர் தடம்மாறி சென்றுவிடும் நிலை உள்ளது. எனவே மணல் அள்ளும் கும்பலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பாலகிருஷ்ணன், களத்துப்பட்டி.

Next Story