புகாா் பெட்டி

புகாா் பெட்டி
மின்விளக்கு எரியுமா?
நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆர்.சி.எஸ். மெயின் ரோடு பகுதியில் உள்ள தெரு விளக்குகளில் அருகே ஒரு கம்பத்தில் மின் விளக்கு கடந்த 2 மாதமாக எரியவில்லை. மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முரளிதரன், நாட்டறம்பள்ளி.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 33-வது வார்டு சங்கரன்பாளையம் ஜெயமுருகன் தியேட்டர் எதிரில் நெடுஞ்சாலையோரம் மாடுகளை கட்டுவது, கழிவுப்பொருட்களை கொட்டுவது, லாரியை நிறுத்தி வைப்பது எனப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் கழிவுநீர் செல்ல போதிய வசதி இல்லை. அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. அப்பகுதியில் உள்ள வீட்டு வசதி குடியிருப்பு கட்டிடம் பாழடைந்துள்ளது. மேற்கண்ட அனைத்துக் கோரிக்கைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெ.சரவணன், வேலூர் மாவட்ட பா.ஜ.க. செயலாளர்.
பழுதடைந்த சிறுமின்விசை தொட்டி
ஆரணி நகராட்சி 23-வது வார்டு பஜனை கோவில் எதிரில் சிறுமின்விசை தொட்டி உள்ளது. அதன் மூலம் தினமும் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். அந்தச் சிறுமின்விசை தொட்டி பழுதாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது. குடிநீருக்காக பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆரணி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சிறுமின்விசை தொட்டியை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-ஏ.விநாயகம், ஆரணி.
காய்ந்த மரக்கிளைகளை அகற்ற வேண்டும்
வேட்டவலத்தில் இருந்து பழவலம், பொன்னமேடு, மலையரசன் குப்பம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் சாலை ஓரம் இலுப்பை மரங்களின் கிளைகள் இலைகள் உதிர்ந்து முறிந்து விழும் நிலை உள்ளது. தற்போது காற்றுடன் கூடிய பருவமழை எந்த நேரத்திலும் பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் சாலையில் மோட்டார்சைக்கிள்களில் செல்வோர் மீது காய்ந்த மரக்கிளைகள் விழுந்து உயிர்பலி ஆகும் அபாயம் உள்ளது. எனவே இதனை அகற்ற சம்ப்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏ.சரிதா, பொன்னமேடு.
தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும்
ஆரணி தாலுகா எஸ்.யூ.வனம் கிராமத்தில் சின்ன ஏரிக்கரை செல்லும் சாலையில் முழங்கால் அளவு உயரத்துக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக மக்கள் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை ெவளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுகம், எஸ்.யூ.வனம்.
(2-படம்) ஆற்றில் குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?
வாணியம்பாடி பெரியபேட்டை பெருமாள் கோவில் பின்பக்கம் பாலாற்றின் கிளை ஆறு உள்ளது. அதில் காலாவதியான குளிர்பானங்கள், நகராட்சி குப்பைகள், கட்டிட கழிவுகள் ஆகியவற்றை கொட்டுகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் நகராட்சி சேகரிக்கும் குப்பைகள் நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன. சாலையோரம் மருத்துவக் கழிவுகள், காலாவதியான குளிர்பானம் ஆகியவை கொட்டப்படுகிறது. இவற்றை அப்புறப்படுத்துவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருள், வாணியம்பாடி.
Related Tags :
Next Story