வீடு புகுந்து வாலிபர் கழுத்தை அறுத்து கொலை


வீடு புகுந்து வாலிபர் கழுத்தை அறுத்து கொலை
x
தினத்தந்தி 28 Oct 2021 3:19 AM IST (Updated: 28 Oct 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

கலபுரகி அருகே வீடு புகுந்து வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். அவரது சகோதரர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக ரவுடி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

வாலிபர் கொலை

  கலபுரகி (மாவட்டம்) புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் கிரண். இவரது சகோதரர் மகேஷ்(வயது 27). இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்தனர். நேற்று காலையில் கிரணும், மகேசும் வீட்டில் இருந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென்று மகேசை சரமாரியாக ஆயுதங்களால் தாக்கினார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிரண் தனது சகோதரரை காப்பாற்ற முயன்றார்.

  அப்போது அவரையும் மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கினார்கள். இந்த நிலையில், மகேசை கத்தியால் குத்தியதுடன், அவரது கழுத்தையும் மா்மநபர்கள் அறுத்தார்கள். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மகேஷ் உயிர் இழந்தார். கிரண் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.

ரவுடிக்கு வலைவீச்சு

  தகவல் அறிந்ததும் கலபுரகி புறநகர் போலீசார் விரைந்து வந்து மகேசின் உடலை மீட்டு விசாரித்தனர். கிரணும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில், மகேசை கொலை செய்தது பிரபல ரவுடி சாகர் மற்றும் அவரது கூட்டாளிகள் என்று தெரிந்தது. சாகருக்கும், மகேசின் தாய் மல்லம்மாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது.

  இதுபற்றி சாகரிடம் மகேஷ் கேட்டு இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மகேசை, சாகர் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கலபுரகி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி சாகர் உள்பட 4 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். வீடு புகுந்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கலபுரகி புறநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story