‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Oct 2021 4:35 PM GMT (Updated: 28 Oct 2021 4:35 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல் : 

சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா? 
உத்தமபாளையம் பேரூராட்சி சூரியநாராயணபுரத்தில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. ஏற்கனவே அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாயும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. மேலும் மழைக்காலத்தில் தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே சூரியநாராயணபுரத்தில் முறையாக சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துபகவதி, சூரியநாராயணபுரம்.

வாரம் இருமுறை குடிநீர் வழங்கவேண்டும்
ஆண்டிப்பட்டி தாலுகா டி.பொம்மிநாயக்கன்பட்டியில் வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு வினியோகம் செய்யப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே வாரம் இருமுறை குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அலெக்சாண்டர், டி.பொம்மிநாயக்கன்பட்டி.

தெருவில் தேங்கும் கழிவுநீர்
தேனி அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சி 3-வது வார்டு சவளப்பட்டி தெருவில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்குவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எத்திராஜ், வெங்கடாசலபுரம்.

சேதமடைந்த சாலையால் அவதி
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னிமாந்துறையில் இருந்து தாமரைக்குளம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாயிகளும் சாகுபடி செய்த காய்கறிகள், நெல்லை சந்தைக்கு கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.அலெக்சாண்டர், பொன்னிமாந்துறை.

அடிப்படை வசதிகள் வேண்டும்
தேனியை அடுத்த சீப்பாலக்கோட்டை ஏ.டி.காலனியில் கடந்த பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அன்பழகன், ஏ.டி.காலனி.

சாலை வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்தில் இருந்து ரெட்டியபட்டிக்கு கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதி செய்யப்படவில்லை. பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையும் மேடு, பள்ளமாக உள்ளது. தோட்டனூத்து மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் நல்லமநாயக்கன்பட்டியில் உள்ள மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களும் இந்த பாதை வழியாக தான் பள்ளிக்கு செல்ல வேண்டும். பாதை மோசமாக இருப்பதால் மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுவிதா, தோட்டனூத்து.


Next Story