குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது


குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 29 Oct 2021 10:32 PM IST (Updated: 29 Oct 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் விழுப்புரம் நேருஜி சாலை, விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் வாகனங்கள் சீரான வேகத்தில் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. அதுபோல் தாழ்வான பகுதிகளான வீனஸ் நகர், கணேஷ்நகர், கே.கே.நகர், கம்பன் நகர், சுதாகர் நகர், மணிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. 
திண்டிவனம் இருதயபுரம், வகாப் நகர், மரக்காணம் சாலை, காமராஜர் நகரில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். 
இருதயபுரத்தில் வீடுகளில் வைத்திருந்த கோலமாவு பொடி மழைநீரில் கலந்து வீணானது. அங்கு புகுந்த மழைநீரை வெளியேற்றுவதற்காக நகராட்சி ஊழியர்கள், பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். அவர்களிடம் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானப்படுத்தி, மழைநீரை வடியவைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். 

Next Story