மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்


மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2021 11:53 AM IST (Updated: 30 Oct 2021 11:53 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிபாபு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பில்லா என்கிற சதீஷ்குமார், சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் மணிமாறன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பிரியா, ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் சமூக தணிக்கை 2019- 2020 குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்தும் நடைபெற்ற பணிகள் விவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் திரளான அரசு அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story