ஓடும் பஸ்சில் நகை திருடிய பெண் கைது


ஓடும் பஸ்சில் நகை திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 30 Oct 2021 10:09 PM IST (Updated: 30 Oct 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் ஓடும் பஸ்சில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் பூவி (வயது 55). இவர் கோவிலூரிலிருந்து காரைக்குடி புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்தார்.காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் இறங்கியபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து வடக்கு போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் புதிய பஸ் நிலைய கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (33) என்பவரை தங்கச்சங்கிலி திருடியதாக கைது செய்தனர்.


Next Story