ஐராவதீஸ்வரர் கோவிலை சுற்றி தேங்கிய மழைநீர் வெளியேற்றம்


ஐராவதீஸ்வரர் கோவிலை சுற்றி தேங்கிய மழைநீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 1 Nov 2021 12:51 AM IST (Updated: 1 Nov 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை சுற்றி தேங்கி இருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டது. கோவிலை சுற்றி மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர வடிகால் வசதி அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம்:
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை சுற்றி தேங்கி இருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டது. கோவிலை சுற்றி மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர வடிகால் வசதி அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஐராவதீஸ்வரர் கோவில்
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் பிரசித்தி பெற்ற ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 4 பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்தி மண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் கலை நுணுக்க வேலைபாடுகளுடன் கொண்ட சிலைகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து செல்கிறார்கள். இந்த கோவிலை தொல்லியல் துறை சார்பில் பராமரித்து வருகிறார்கள். கும்பகோணத்தில் மழை பெய்தால் ஐராவதீஸ்வரர் கோவில் உள்பிரகாரம், கோவில் முன்பு உள்ள நந்தி சிலை மற்றும் கோவிலை சுற்றியுள்ள அகழிகளில் தண்ணீர் தேங்கி வருவது வழக்கம்
மழைநீர் வெளியேற்றும் பணி
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருவவதால், கோவிலை சுற்றியுள்ள அகழியில் மழைநீர் தேங்கி உள்ளது. தண்ணீர் தேங்கியுள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அகழியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத மோட்டார் கொண்டு கடந்த 2 நாட்களாக தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் எப்போது மழை பெய்தாலும் ஐராவதீஸ்வரர் கோவிலில் தண்ணீர் தேங்குவது வழக்கமாக உள்ளது.  மழை நீரை வெளியேற்றுவதற்கு நிரந்தர வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றினாலும், தண்ணீர் உடனடியாக வடிவதில்லை. எனவே, இந்த கோவிலுக்கு உடனடியாக நிரந்தர வடிகால் அமைக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story