பயிர்களில் அதிக மகசூல் பெற மழை கை கொடுக்கும்


பயிர்களில் அதிக மகசூல் பெற மழை கை கொடுக்கும்
x
தினத்தந்தி 1 Nov 2021 1:17 AM IST (Updated: 1 Nov 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையினால் பயிர்களில் அதிக மகசூல் பெற கை கொடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் கூறினர்.

ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையினால் பயிர்களில் அதிக மகசூல் பெற கை கொடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் கூறினர்.  
தொடர்மழை 
 ஆலங்குளம், கொங்கன்குளம், டி.கரிசல்குளம், மேலாண்மறைநாடு, வலையபட்டி, தொம்ப குளம், கண்மாய்பட்டி சுண்டங்குளம், ஏ.லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, குறுஞ்செவல், கோபாலபுரம், புளிய டிபட்டி, குண்டாயிரிப்பு, முத்துசாமி புரம், எட்டாக்காபட்டி, எதிர்கோட்டை உப்பு பட்டி, மாதாங்கோவில்பட்டி, கல்லமநாயக்கர் பட்டி ஆகிய கிராமங்களில் நல்ல மழை பெய்தது.
இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஆலங்குளம் பகுதியில்  மக்காச்சோளம், பருத்தி, மிளகாய், பாசிப்பயறு, உளுந்தம் பயறு போன்ற பயிர்கள் சாகுபடி செய்து உள்ளனர்.
 இந்த பயிர்கள் வளர்வதற்கும், பயிர்களுக்கு நோய் வராமல் தடுப்பதற்கும், அதிக மகசூல் பெறுவதற்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 
விவசாயிகள் மகிழ்ச்சி 
ஆலங்குளத்தில் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான கல்குவாரிகளில் சுண்ணாம்பு கல் எடுத்த பின்னர் பயன்பாட்டில் இல்லாத குவாரிகள் உள்ளன. 
இப்போது குடிதண்ணீருக்காக  பயன்பாட்டில் உள்ள குவாரியில் தண்ணீர் பெருகி உள்ளது. இதில் உள்ள தண்ணீர் சிமெண்டு ஆலை காலனியில் குடியிருக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக எடுத்து செல்ல படுகின்றது. இந்த குவாரியில் உள்ள குடிதண்ணீரை பாதுகாக்க காவலர்கள் போடப்பட்டு உள்ளனர். இந்த குவாரியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் பக்கத்தில் உள்ள கிணறுகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Tags :
Next Story