மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலி
மேட்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
மேட்டூர்
லாரி டிரைவர்
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 28). லாரி டிரைவர். இவருடைய நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த கவின்குமார் (20), சிவா (23). இவர்கள் 3 பேரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் மேட்டூரில் இருந்து புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஆனந்தன் ஓட்டினார். எதிரே மேட்டூரை சேர்ந்த சதாம்உசேன் (24) பவானியில் இருந்து மேட்டூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். கூனான்டிபுதூரில் அந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
2 பேர் பலி
இதில் ஆனந்தன், கவின்குமார் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். சிவா மற்றும் காரை ஓட்டி வந்த சதாம்உசேன் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிவா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் பலியான ஆனந்தன், கவின்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோகம்
மேட்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story