விளைநிலங்களுக்குள் புகுந்த தண்ணீர்


விளைநிலங்களுக்குள் புகுந்த தண்ணீர்
x
தினத்தந்தி 5 Nov 2021 10:59 PM IST (Updated: 5 Nov 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது.

திண்டுக்கல்: 

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு கண்மாய்க்கு மஞ்சளாறு அணையில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த கால்வாயில் பழைய வத்தலக்குண்டு பிரிவு அருகே நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, வத்தலக்குண்டு வருவாய் அலுவலர் அங்குசாமி, கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த உடைப்பை சரி செய்ய உத்தரவிட்டனர். அதன்படி, கால்வாய் உடைப்பை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story