கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்


கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்
x
தினத்தந்தி 6 Nov 2021 1:29 AM IST (Updated: 6 Nov 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.

தளவாய்புரம்,
தேவதானம் குமரன், சேத்தூர் திருக்கண்ணிஸ்வரர் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். 
அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் இரவு சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் 6-வது  வருகிற 9 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை சுவாமி சூரசம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
10-ந் தேதி (புதன்கிழமை) மாலை சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார், தேவதானம் கோவில் செயல் அலுவலர் ஜவகர், சேத்தூர் கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்து வருகின்றனர். அதேபோல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Next Story