பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் நீர்கசிவு; தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு; பொதுப்பணித்துறையினரின் நடவடிக்கையால் உடைப்பு தவிர்க்கப்பட்டது

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட ஓட்டை வழியாக நீர் கசிந்து தண்ணீர் குபுகுபு என வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுப்பணித்துறையினர் விரைந்து செயல்பட்டதால் கரையில் ஏற்பட இருந்த பெரிய உடைப்பு தவிர்க்கப்பட்டது.
பெருந்துறை
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட ஓட்டை வழியாக நீர் கசிந்து தண்ணீர் குபுகுபு என வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுப்பணித்துறையினர் விரைந்து செயல்பட்டதால் கரையில் ஏற்பட இருந்த பெரிய உடைப்பு தவிர்க்கப்பட்டது.
கீழ்பவானி பிரதான வாய்க்கால்
பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டி அருகே உள்ள கிராமம் தாசம்புதூர். இந்த கிராமத்தின் வழியாக கீழ்பவானி பிரதான வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் கரையோரம், தாசம்புதூருக்கு செல்லும் கொப்பு வாய்க்காலின் மதகு ஒன்று உள்ளது.
நேற்று முன்தினம் காலை, தாசம்புதூரைச் சேர்ந்த சிலர் துணி துவைப்பதற்காக, கொப்பு வாய்க்கால் மதகு பக்கம் சென்றுள்ளனர். அப்போது, பிரதான வாய்க்காலின் கரையோர கற்கள் பெயர்ந்து, அதன் ஓட்டை வழியாக நீர் கசிந்து தண்ணீர் குபுகுபு என வெளியேறிக்கொண்டிருந்ததை கண்டனர்.
மணல் மூட்டைகளை...
உடனே இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். உடனே அவர்கள், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்தினர்.
இதைத்தொடர்ந்து கொப்பு வாய்க்கால் மதகு அருகே ஏற்பட்ட ஓட்டையை அடைக்க ஏராளமான மணல் மூட்டைகளை கொண்டு வந்து அடுக்கி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு வைத்தனர்.
நீரோட்டம் குறையவில்லை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டு 24 மணி நேரம் ஆகியும் நீரோட்டம் குறையவில்லை. 2 நாட்கள் கழிந்தால் தான் நீரோட்டம் குறையும். நீரோட்டம் முழுவதும் குறைந்த பின்னர்தான் வாய்க்கால் கரையில் ஏற்பட்ட ஓட்டையை முழுவதுமாக அடைக்க முடியும்.
இதை வைத்து பார்க்கும்போது வாய்க்கால் கரை பலப்படுத்தப்பட்டு மீண்டும் வாய்க்காலில் தண்ணீர் திறக்க குறைந்தது 10 நாட்களாவது ஆகும் என தெரிகிறது,’ என்றனர்.
Related Tags :
Next Story