தினத்தந்தி புகார் பெட்டி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை நடுவே பள்ளம்
தஞ்சை மேலவீதி மற்றும் வடக்கு வீதி பகுதியில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக மேலவீதி பகுதியில் உள்ள சாலையின் நடுவே ஆங்காங்கே ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. பெரிய பள்ளங்களை குப்பைத்தொட்டி வைத்து மறைந்துள்ளன. இதனால் சாலையின் நடுவே குப்பைத்தொட்டி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சென்று வரும் முக்கிய சாலை பராமரிப்பின்றி கிடப்பது அனைத்து தரப்பு மக்களையும் சிரமத்துக்கு ஆளாக்கி உள்ளது. எனவே, சாலை நடுவே உள்ள ஆபத்தான பள்ளங்களால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், தஞ்சாவூர்.
சேறும், சகதியுமான சாலை
ஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த கீழஉளூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆறியான் தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-ரவிசந்திரன், கீழஉளூர்.
ஆபத்தான பள்ளிகட்டிடம்
தஞ்சையை அடுத்த மணல்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக கட்டிடத்தின் மேற்பரப்பில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளன. அதுமட்டுமின்றி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மாணவர்களுக்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடுமோ? என பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி மணல்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், மணல்மேடு
தெருவிளக்குகள் ஒளிருமா?
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஏ.ஆர்.ஆர்.காலனி பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது பராமரிப்பின்றி தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் விபத்துகளி்ல் சிக்கி கொள்கின்றனர். மேலும், அந்த பகுதியில் குப்பைகள் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தெருவிளக்குகள் ஒளிரவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், கும்பகோணம்.
குடிநீர், சாலை வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் மனக்கரம்பை பகுதியில் உள்ள எஸ்.என்.எம். அஸ்பாக் நகரில் சாலை மற்றும் குடிநீர் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் மண்சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், மனக்கரம்பை.
முட்செடிகள் அகற்றப்படுமா?
தஞ்சை மானம்புச்சாவடி அருகே உள்ள ஆடக்கார தெருவில் குடியிருப்பு பகுதியில் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இந்த புதர்களில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும், புதர்மண்டி கிடப்பதால் அந்த பகுதியில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன்கருதி குடியிருப்பு பகுதியில் புதர்போல் வளர்ந்து கிடக்கும் முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும். -பொதுமக்கள், தஞ்சாவூர்.
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிவக்கொல்லை கிராமத்தில் உள்ள கணபதி நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்கம்பம் உள்ள பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.
Related Tags :
Next Story