ரெயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழைநீர் அகற்றம்

கோவில்பட்டி அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
மழைநீரில் மூழ்கிய சுரங்கப்பாதை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் கோவில்பட்டி அருகே மேல பாறைபட்டி கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியது.
இதனால் அந்த கிராம மக்கள் அத்திவாசிய தேவைக்கு வாகனங்களில் வெளியூர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ரெயில்வே சுரங்கப்பாதையின் தடுப்பு சுவர் வழியாக சிலர் ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.
மீண்டும் போக்குவரத்து
இதையடுத்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில், மேல பாறைபட்டி கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை 6 மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி அகற்றும் பணி இரவு பகலாக மும்முரமாக நடந்தது.
தொடர்ந்து நேற்று மழைநீர் முற்றிலும் அகற்றப்பட்ட பின்னர் சுரங்கப்பாதை வழியாக மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மேல பாறைபட்டி கிராமத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story