தாக்கப்பட்ட மீனவர் சாவு

கருங்கல் அருகே திருமண வீட்டு முன்பு தகராறு செய்ததால் தாக்கப்பட்ட மீனவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால் கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல்,
கருங்கல் அருகே திருமண வீட்டு முன்பு தகராறு செய்ததால் தாக்கப்பட்ட மீனவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால் கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மீனவர் மீது தாக்குதல்
கருங்கல் அருகே உள்ள மேலகுறும்பனை பாத்திமா நகரை சேர்ந்தவர் புருனோ (வயது 53), மீனவர். கடந்த 27-ந்தேதி நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு புருனோவுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த புருனோ சம்பவத்தன்று திருமண வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தையால் பேசியதால், அதே பகுதியை சேர்ந்த அந்தோணி (45) என்பவர் தட்டி கேட்டு அவரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த புருனோ ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே புருனோவின் சகோதரி கருங்கல் போலீசில் இதுபற்றி புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்தோணியை கைது செய்தனர்.
கொலை வழக்காக மாற்றம்
இந்தநிலையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி புருனோ பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து கருங்கல் போலீசார் ஏற்கனவே பதிவு செய்திருந்த அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story