இரும்பு கம்பிகள் திருடிய 3 பேர் சிக்கினர்


இரும்பு கம்பிகள் திருடிய 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 8 Nov 2021 3:08 AM IST (Updated: 8 Nov 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

இரும்பு கம்பிகள் திருடிய 3 பேர் சிக்கினர்

திசையன்விளை:
உவரி அருகே உள்ள குண்டல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்த இரும்பு கம்பிகளை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக உவரி போலீசில் ஆலை காவலாளி தியாகராஜ் புகார் செய்தார். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விசாரணை நடத்தி, உவரி லைன் தெருவை சேர்ந்த ராஜா (வயது 22), கலையரசன் (20), சுதன் (24) ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து திருட்டு போன இரும்பு கம்பிகளை போலீசார் மீட்டனர்.

Next Story