கார் மீது வேன் மோதி தாத்தா பேரன் பலி


கார் மீது வேன் மோதி தாத்தா பேரன் பலி
x
தினத்தந்தி 8 Nov 2021 11:46 PM IST (Updated: 8 Nov 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே உறவினர் திருமணத்திற்கு சென்றபோது கார்மீது வேன் மோதியதில் தாத்தா பேரன் பலியானார்கள். 5 பேர் காயமடைந்தனர்.

தூசி

செய்யாறு அருகே உறவினர் திருமணத்திற்கு சென்றபோது கார்மீது வேன் மோதியதில் தாத்தா  பேரன் பலியானார்கள். 5 பேர் காயமடைந்தனர்.

உறவினர் திருமணத்திற்கு

காஞ்சீபுரம் மாவட்டம், காஞ்சீபுரம் அருகே உள்ள வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 33), என்ஜினீயர். 

அவரது மனைவி சுகன்யா (30). இவர்களுடைய மகன் விஷ்வா (8), மகள்கள் நிலா (5), கமலி (3). இவர்களுடைய உறவினர் திருமணம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கத்தை அடுத்த மாமண்டூரில் இன்று நடந்தது.

இதில் கலந்துகொள்வதற்காக இளங்கோவன் தனது மனைவி, மகன், மகள்கள் மற்றும் இளங்கோவனின் சித்தப்பா குழந்தைவேலு (60), இவரது மனைவி புஷ்பா ஆகிய 7 பேரும் வையாவூர் கிராமத்திலிருந்து நேற்று காலை காரில் புறப்பட்டனர். 

கார்மீது வேன் மோதல்

இளங்கோவன் காரை ஓட்டிவந்தார். மாமண்டூர் ஐந்து கண் பாலத்தின் அருகே வந்தபோது எதிரே சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ஊழியர்களை ஏற்றி வந்த வேன் திடீரென கார் மீது மோதியது.

 இதில் கார் அப்பளம்போல் நொறுங்கி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். 

காஞ்சீபுரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் காரின் கண்ணாடியை உடைத்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

தாத்தா- பேரன் பலி

ஆனால் குழந்தைவேலு, சிறுவன் விஷ்வா ஆகிய இருவரும் இறந்துவிட்டனர். மற்ற 5 பேரும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவர்கள் 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றார்.

Next Story