அரக்கோணத்தில் முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு


அரக்கோணத்தில் முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 9 Nov 2021 12:03 AM IST (Updated: 9 Nov 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டுப்போனது.

அரக்கோணம்

அரக்கோணத்தில் முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டுப்போனது. மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்னாள் ராணுவவீரர்

அரக்கோணம் வெங்கடேசபுரம் அகன் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 41). இவரின் கணவர் மனோகரன், முன்னாள் ராணுவ வீரர். இவர்கள் குடும்பத்துடன் கடந்த 4-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அறை ‌கதவுகள் திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, கட்டில் மெத்தைக்கு கீழே மறைத்து வைத்திருந்த 45 பவுன் நகைகளை காணவில்லை. மர்மநபர் யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
போலீஸ் வலைவீச்சு 

இது குறித்து மனோகரன் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story