போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டு


போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 9 Nov 2021 1:35 AM IST (Updated: 9 Nov 2021 10:57 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது

திருச்சி
திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் முருகேசன் (வயது 38). இவர் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் பின்புறம் உள்ள கல்லுக்குழி ரெயில்வே காலனி 4-வது வீதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி மாலை 4 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அவர் சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் நேற்று மாலை வந்து பார்த்தபோது, வீட்டில் பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருந்தன. வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் அதே பகுதியில் 3-வது வீதியில் ஒருவீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story