நாமக்கல் மாவட்டத்தில் நாளைமறுநாள் 110 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு-ஆலோசனை கூட்டத்தில் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் நாளைமறுநாள் 110 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறுகிறது.
நாமக்கல்:
பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவு திறனை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இந்த தேர்வு நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 110 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதில் 183 பள்ளிகளை சேர்ந்த 3, 5, 8 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதன்மை கல்வி அதிகாரி மகேஷ்வரி தலைமை தாங்கி பேசினார். இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமன், விஜயா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், உடற்கல்வி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story