6 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


6 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 9 Nov 2021 11:51 PM IST (Updated: 9 Nov 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 6 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
நெல்லையில் 6 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொலை வழக்கு

நெல்லை பாளையங்கோட்டை சங்கர்காலனி செண்பகம்நகரை சேர்ந்தவர் அப்துல்காதர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து சாத்தான்குளத்தை சேர்ந்த செல்லப்பா (வயது 22), மாணிக்கராஜா (25), தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த காளியப்பன் (26), புதுக்கோட்டையைச் சேர்ந்த மாதேஸ்வரன் (21), அணியாபரநல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் (22), சங்கர்கணேஷ் (24) ஆகியோர் பாளையங்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனருக்கு, துணை போலீஸ் கமிஷனர் டி.பி. சுரேஷ்குமார், பாளையங்கோட்டை உதவி கமிஷனர் பாலசந்திரன், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைகண்ணன் ஏற்று, செல்லப்பா, மாணிக்கராஜா, காளியப்பன், மாதேஸ்வரன், பாலமுருகன், சங்கர்கணேஷ் ஆகிய 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் திருப்பதி, பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

Next Story