கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற கலெக்டர் உத்தரவு


கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 11 Nov 2021 12:33 AM IST (Updated: 11 Nov 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி- வளையாம்பட்டு பகுதியில் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை உடனடியாக அகற்ற கலெக்டர் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார்.

வாணியம்பாடி

வாணியம்பாடி- வளையாம்பட்டு பகுதியில் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை உடனடியாக அகற்ற  கலெக்டர் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார். 

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆலங்காயம், அம்பலூர், திம்மாம்பேட்டை, அல சந்தாபுரம், ஆவாரங்குப்பம், நாராயணபுரம் மற்றும் தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் உள்ள புல்லூர் பகுதியிலும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது, இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு அரசால் அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

பள்ளி பகுதியில் மழை நீர் தேக்கம்

 இந்த நிலையில் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுவதாகவும், வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் பெருமளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வேலூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுவதாக வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. கோ.செந்தில்குமார், தமிழக அரசால் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு என நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தென்காசி எஸ்.ஜவகர் மற்றும் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவுக்கு நேற்று காலை தகவல் தெரிவித்தார்.

அதிகாரிகள் அதிரடி உத்தரவு

 அதன் அடிப்படையில் உடனடியாக வாணியம்பாடிக்கு வந்த அரசு கூடுதல் செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வளையாம்பட்டு பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி உள்ள பகுதியையும், பள்ளி கட்டிடங்களையும், சர்வீஸ் சாலையில் தேங்கி உள்ள தண்ணீர் பகுதியையும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையபாண்டியன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, முருகேசன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்ட பகுதியில் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடங்களை உடனடியாக அகற்றவும், கால்வாய்களை தூர் வாரி மழை நீர் ஆற்றுக்கு செல்ல போதுமான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் கிராம நிர்வாக அலுவலர்கள் தீனதயாளன், விக்ரம் வளையாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி கவுண்டர் ஒன்றியக்குழு உறுப்பினர் வசந்தி அருள்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, வரதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story