25 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு


25 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Nov 2021 2:30 AM IST (Updated: 12 Nov 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

குளிரால் 25 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கோழி இறைச்சி நுகா்வு குறைந்துள்ளது. இதனால் கறிக்கோழிகள் விற்பனையாகாமல் பண்ணைகளிலேயே தேக்கமடைந்துள்ளன. கொள்முதல் விற்பனை விலையும் படிப்படியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர் மழையாலும், இதனால் ஏற்பட்ட கடும் குளிரினாலும் கோழிகளும், கோழி குஞ்சுகளும் உயிரிழந்து வருகின்றன. இந்த வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Next Story