வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பல்லடம், நவ.13-
திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் மகன் தினேஷ் (வயது 22). இவர் பல்லடம் அருகே ரங்கசமுத்திரம் பகுதியில் தனியார் விசைத்தறி குடோனில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்ற அவர் நேற்று முன்தினம் விசைத்தறி கூடத்திற்கு திரும்பி வேலைக்கு வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் தங்கியுள்ள வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து உடன் பணியாற்றும் தொழிலாளர்கள் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்தனர். அப்போது வீட்டினுள் தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடம் வந்த போலீசார் தினஷே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தற்கொலை குறித்து அவரது தந்தை சரவணன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story