மூங்கில்துறைப்பட்டு அருகே லாரி மோதி பெண் தலை நசுங்கி சாவு லிப்ட் கேட்டு சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்

மூங்கில்துறைப்பட்டு அருகே லாரி மோதி பெண் தலை நசுங்கி சாவு லிப்ட் கேட்டு சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூர் நடு தெருவைச் சேர்ந்தவர் ரத்தினாம்மாள்(வயது 55). இவர் ராவத்தநல்லூர் பகுதியிலிருந்து மணலூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவரிடம் லிப்ட் கேட்டு ஏறி சென்று கொண்டிருந்தார். பிரம்மகுண்டம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ரத்தினாம்மாள் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடபொன்பரப்பி போலீசார் ரத்தினாம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்டு சென்ற பெண் தவறி விழுந்து தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story