பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது


பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2021 10:46 PM IST (Updated: 13 Nov 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி 3-ம் மைல் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவருடைய மனைவி ஆறுமுககனி. இவரிடம் கடந்த 11-ந்தேதி இவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள ஆனந்தராஜ் மகன் செந்தில் என்ற சந்தனகுமார் (வயது 33) என்பவர் மதுபோதையில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆறுமுககனி அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்குப்பதிவு செய்து சந்தனகுமாரை கைது செய்தார்.

Related Tags :
Next Story