நரிக்குறவர் காலனியை சூழ்ந்த வெள்ளம்

வள்ளியூரில் நரிக்குறவர் காலனியை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
வள்ளியூர்:
வள்ளியூரில் நரிக்குறவர் காலனியை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
நரிக்குறவர் காலனி
கன்னியாகுமரி பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மிதமான முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
வள்ளியூர் பகுதியில் பெய்த கன மழையால் தேவர்குளம் பெருகி அங்குள்ள நரிக்குறவர் காலனியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் அருகிலுள்ள காலி இடத்தில் தற்காலிக குடில் அமைத்து தங்கியுள்ளனர்.
உதவி கலெக்டர்
இதனையறிந்த சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து, நரிக்குறவர் காலனிக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் குளத்திற்கு வரும் தண்ணீரை வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வள்ளியூர் சமத்துவபுரத்தில் உள்ள சமுதாய கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு வள்ளியூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோலப்பன் தலைமையில் டாக்டர் ராமலிங்கம் மற்றும் மருத்துவ குழுவினர் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
அப்போது, நகர பஞ்சாயத்து உதவி இயக்குனர் குற்றாலிங்கம், ராதாபுரம் தாசில்தார் ஜேசுராஜன், வள்ளியூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுஷ்மா மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
மரம் சாய்ந்தது
இட்டமொழி அருகே உள்ள சுவிசேஷபுரத்தில் சர்ச் வளாகத்தில் உள்ள ஒரு மரம் நேற்று பெய்த மழையால் வேரோடு சாய்ந்தது. பின்னர் பொதுமக்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அந்த மரத்தை அகற்றினார்கள்.
Related Tags :
Next Story