காட்டு யானைகளை விரட்ட கும்கிகள் வரவழைப்பு


காட்டு யானைகளை விரட்ட கும்கிகள் வரவழைப்பு
x
தினத்தந்தி 14 Nov 2021 6:14 PM IST (Updated: 14 Nov 2021 6:14 PM IST)
t-max-icont-min-icon

காட்டு யானைகளை விரட்ட கும்கிகள் வரவழைப்பு

கூடலூர்

பொதுமக்கள் போராட்டம் எதிரொலியால் காட்டு யானைகளை விரட்ட கும்கிகள் வரவழைக்கப்பட்டு ரோந்து பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காட்டு யானைகள் அட்டகாசம்

கூடலூர் தாலுகா பாடந்தொரை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் வீடுகள், கடைகளை உடைத்து சேதப்படுத்தி வருகிறது. இதேபோல் வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாயப் பயிர்களையும் நாசம் செய்து வருகிறது. 2 தினங்களுக்கு முன்பு வரை ஒரு பெண்ணை காட்டு யானை தாக்கியது.
தொடர்ந்து காட்டு யானைகளை விரட்ட கோரி பாடந்தொரை பகுதி மக்கள் கூடலூர்- சுல்தான் பத்தேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் இரு மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் தெரியவந்தது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் காட்டு யானைகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கும்கி யானைகள் வரவழைப்பு

தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாலையில் பொது மக்களின் போராட்டம் எதிரொலியால் முதுமலையில் இருந்து கும்கி யானைகள் விஜய், சுஜய் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து கூடலூர், நாடுகாணி சரக பகுதியில் உள்ள வன ஊழியர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டனர். பின்னர் பாடந்தொரை பகுதியில் உள்ள கல்லீங்க ரை, செளுக்காடி உள்பட பல இடங்களில் ரோந்து பணி தீவிரமாக நடைபெற்றது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கும்கி யானைகள் மூலம் இரவு பகலாக ரோந்து நடைபெறுகிறது. காட்டு யானைகள் வந்தால் பொதுமக்கள் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். அதனடிப்படையில் கும்கி யானைகள் மூலம் விரட்டியடிக்கப்படும். மேலும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story