புதுச்சேரியில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி

புதுச்சேரியில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலியான நிலையில் புதிதாக 43 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
புதுச்சேரி, நவ.
புதுச்சேரியில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலியான நிலையில் புதிதாக 43 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
கொரோனா பரிசோதனை
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 43 பேருக்கு தொற்று உறுதியானது.
இதில் புதுச்சேரியில் 11 பேர், காரைக்காலில் 13 பேர், மாகியில் 9 பேர், ஏனாமில் 10 பேர் ஆவர். இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 444 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 96 பேரும், வீடுகளில் 201 பேர் என 297 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 19 பேர் குணமடைந்தனர்.
2 பேர் பலி
புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுப்பையா சாலையை சேர்ந்த 62 வயது பெண், மாகி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 96 வயது மூதாட்டி ஆகியோர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,865 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தொற்று பரவல் 1.62 சதவீதமாகவும், குணமடைவது 98.32 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 1077 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 430 பேரும் போட்டுக்கொண்டனர். இதுவரை 11 லட்சத்து 55 ஆயிரத்து 261 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story