தங்கம் என கூறி பித்தளையை விற்க முயன்ற வாலிபர் கைது

உளுந்தூா்பேட்டை அருகே தங்கம் என கூறி பித்தளையை விற்க முயன்ற வாலிபரை போலீசாா் கைது செய்தனா்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இந்த நகருக்கு டிப்டாப் உடை அணிந்து கொண்டு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள், ஸ்ரீநாத்திடம் நைசாக பேச்சு கொடுத்து, தங்களிடம் தங்க நாணயம் இருப்பதாக கூறி சிலவற்றை காண்பித்தனர். பின்னர் அவர்கள், இதனை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதனை வாங்கிக்கொள்ளுமாறும் கூறினர். இதில் சந்தேகமடைந்த ஸ்ரீநாத், நைசாக எடைக்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் 2 வாலிபர்களும் ஓடினர். இதில் ஒருவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன்(வயது 27) என்பதும், பித்தளையை நாணயம்போன்று வடிவமைத்து பொலிவூட்டி அதனை தங்கம் என்று கூறி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவ்நதது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story