பாலியல் தொல்லைகளை தெரிவிக்க புகார் பெட்டி

பாலியல் தொல்லைகளை தெரிவிக்க புகார் பெட்டி
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், கல்லூரிகளின் முதல்வர்களுடன் மாவட்ட காவல்துறை சந்திப்பு கூட்டம் ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் ஆஷா மனோகரி ஆகியோர் கலந்துரையாடல் நடத்தினர்.
கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் வழிகாட்டும் குழுக்கள் அமைக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி, உளவியல் பிரச்சினைகளுக்கு ஆலோசனை முகாம் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து எளிதில் புகார் அளிக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story