டிப்பர் லாரி சென்றபோது சேதமடைந்த பேவர்பிளாக் சாலை

உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் டிப்பர் லாரி சென்றபோது பேவர் பிளாக் சாலை சேதமடைந்தது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையத்தில் அம்மாபட்டி செல்லும் சாலையில் ஆசிரியர் பயிற்சி பள்ளி அருகே புதிய தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் கடந்த சில தினங்களுக்கு பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கம்பம் வடக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட எம்.சாண்ட் மண் ஏற்றிய டிப்பர் லாரியை தாலுகா அலுவலகத்துக்கு ஊழியர்கள் நேற்று கொண்டு வந்தனர். அப்போது தாலுகா அலுவலக வளாகத்தில் புதிதாக போடப்பட்ட பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட சாலையில் டிப்பர் லாரி சென்றபோது திடீர் பள்ளம் ஏற்பட்டது.
அந்த பள்ளத்தில் லாரியின் சக்கரங்கள் சிக்கி கொண்டது. இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த கிராவல் மண் கீழே கொட்டப்பட்டது. அதன்பின்பு பள்ளத்தில் சிக்கி இருந்த லாரியை ஊழியர்கள் மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, தாலுகா அலுவலக கட்டிடம் புதிதாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்பும் குடிநீர் வசதி இல்லை. வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் சாலை தற்போது சேதமடைந்துள்ளது. எனவே கட்டிடத்தின் தன்மையை ஆராயவேண்டும் என்றனர். தாலுகா அலுவலக வளாகத்தில் லாரி சிக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story