அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மறியல்


அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 18 Nov 2021 4:08 AM IST (Updated: 18 Nov 2021 4:08 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்:
சேலம் மாநகராட்சி 27-வது வார்டு சத்திரம் பாவேந்தர் தெருவில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று காலை அந்த பகுதி மக்கள் செவ்வாய்பேட்டை செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story