குழந்தைகள் உண்ணும் கேக்கில் போதை மாத்திரைகள் உள்ளதா? உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் சமீபகாலமாக சிறுவர்கள் கடைகளில் வாங்கி உண்ணும் தின்பண்டம் மற்றும் குளிர்பானங்களால் வாந்தி, மயக்கம் மற்றும் ஒரு சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
உணவு பொருட்களில் உள்ள கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்களே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்தநிலையில் கேக்கில் போதை மாத்திரைகள் இருப்பதாகவும், இதனை உட்கொண்டால் குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படுவதாகவும், வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் வேலவன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள், பூந்தமல்லியில் உள்ள தின்பண்டங்களை மொத்தமாக விற்கும் கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அதிகாரிகள் கேக்கை பிரித்து கலப்படம் மற்றும் போதை மாத்திரை உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் வியாபரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story