பல ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிறைந்ததால் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஏரி நிறைந்ததால் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி, கடந்த பல ஆண்டுகளாக அதன் முழு கொள்ளளவை எட்டாமல் இருந்தது. இதனால், போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் தற்போது பெய்து வரும் பருவ மழையினால் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக நேற்று மாலை ஏரி முழுமையாக நிரம்பியதுடன் உபரிநீர் வெளியேறியது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை கொண்டாடும் விதமாக ஏரி பகுதியில் இளைஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து நேற்று கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கேக் மற்றும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அன்னமங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் சின்னாறு நீர்த் தேக்கத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது.
Related Tags :
Next Story