கிராம சுகாதார செவிலியர்கள் வேலைநிறுத்தம்


கிராம சுகாதார செவிலியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 19 Nov 2021 1:00 AM IST (Updated: 19 Nov 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் கிராம சுகாதார செவிலியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி, 
சிவகாசி சுகாதார மாவட்டத்தில் கிராம சுகாதார செவிலியர்களாக 160 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் நேற்று காலை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் திரண்டு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை வரை அலுவலகம் முன்பு அமர்ந்து இருந்தனர். பின்னர் கிராம சுகாதார செவிலியர்கள், சிவகாசி சுகாதார மாவட்ட அதிகாரி கலுசிவலிங்கத்திடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 
கொரோனா தடுப்பூசி முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்துவதை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்துஅதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story