‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
x
தினத்தந்தி 19 Nov 2021 1:21 AM IST (Updated: 19 Nov 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின் விளக்கு எரியுமா?

தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி அருகே வனதுர்கா நகர், காமராஜர் நகர் உள்ளது. இந்தப் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள் இந்தப் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இரவு நேரத்தில் எரிவது இல்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து உள்ளது. இதனால் பொது மக்கள் நடமாட முடியாமல் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பங்களில் மின்விளக்குகளை எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்
-பொதுமக்கள், மனோஜிப்பட்டி.

வேகத்தடை வேண்டும்

பாபநாசம் அருகே மேட்டு தெரு, இளங்கர்குடி கிராமத்தையும் இணைக்கும் புதிய பாலம் ஒன்று காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது.இந்த பாலத்தில் வாகன போக்குவரத்து அதிகமாகவும், வாகனங்கள் வேகமாக செல்கின்றன இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலை துறையினர் உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
-பாக்கியராஜ், புத்தூர்.

வாய்க்காலில் தேங்கும் கழிவுநீர்

பாபநாசம் அருகே அன்னுகுடி வாய்க்கால்கடந்த சில தினங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. இந்த நிலையில் அன்னுகுடி பாசன வாய்க்காலில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அன்னுகுடி வாய்க்காலில் கழிவு நீர் தேங்காமல் இருக்க தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-சச்சிதானந்தம், பாபநாசம்.

Next Story