மேல்-சபை தேர்தலுக்கான, பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு; பசவராஜ் பொம்மை பேட்டி


மேல்-சபை தேர்தலுக்கான, பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு; பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2021 2:13 AM IST (Updated: 19 Nov 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:கர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வேட்பாளர் பட்டியல்

கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 25 இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் 19-ந் தேதிக்குள் (அதாவது இன்று) அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் பிரசாரம் செய்ய முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, கட்சியின் தலைவர் நளின்குமார் கட்டீல் ஆகியோரது தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் நாங்கள் ஜனஆசிர்வாத் யாத்திரையை நடத்துகிறோம். இந்த யாத்திரை இன்று (நேற்று) தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது. மாநிலம் முழுவதும் இந்த யாத்திரை நடக்கிறது. 2 மாவட்டங்களை தவிர நாங்கள் வேட்பாளர் பட்டியலை கட்சி மேலிடத்திற்திகு அனுப்பியுள்ளோம். தேர்தலுக்காக மட்டுமின்றி கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இந்த யாத்திரையில் உள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

எடியூரப்பா

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும். இதன் மூலம் மேல்-சபையில் எங்கள் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும்" என்றார்.

Next Story