வெள்ளலூர் குளக்கரையில் 9 அரிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு

வெள்ளலூர் குளக்கரையில் 9 அரிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு
கோவை
கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், வெள்ளலூர், ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கோவை வெள்ளலூர் குளக்கரையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கும் வகையில் மியாவாக்கி முறையில் அடர்வனம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இங்கு ஊர்வன, பூச்சி, பறவைகள் என பல்வேறு வகையான உயிரினங்கள் வசித்து வருகின்றன. வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்காக நரிகிளுகிளுப்பை, தேள்கொடுக்கு ஆகிய செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் வெள்ளலூர் குளக்கரை பூங்காவில் வண்ணத்துப்பூச்சி களை கணக்கெடுக்கும் பணி தனியார் அமைப்பு சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் மூங்கில் மரம் பழுப்பு, காமன் பாண்டட் பீகாக், டார்க் பாம் டாட், கிராஸ் டெமன் உள்பட 9 அரிய வகை வண்ணத்துப்பூச்சி அடையாளம் காணப்பட்டு உள்ளது.
வெயில் காலத்தில் இருக்கும் சில வகை வண்ணத்துப்பூச்சிகள் மழைக்காலத்தில் இருக்காது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story