புவனகிரி அருகே வாய்க்காலில் பச்சிளம் குழந்தை பிணம் போலீஸ் விசாரணை


புவனகிரி அருகே வாய்க்காலில் பச்சிளம் குழந்தை பிணம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 20 Nov 2021 11:01 PM IST (Updated: 20 Nov 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே வாய்க்காலில் பச்சிளம் குழந்தையின் பிணம் கிடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புவனகிரி, 

புவனகிரி அருகே பூதவராயன் பேட்டை பகுதியில் சின்ன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் பச்சிளம் குழந்தை ஒன்று பிணமாக மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், உடனடியாக புவனகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, குழந்தையை மீட்டனர். அப்போது அது ஆண் குழந்தை என்பதும், தொப்புள் கொடியுடன் இருந்ததும் தெரிந்தது. பின்னர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக புவனகிரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

போலீஸ் விசாரணை

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுகுமாறன் கொடுத்த புகாரின் பேரில், குழந்தை யாருடையது? குழந்தையை யாரேனும் கடத்தி வந்து வாய்க்காலில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story